சுப்பு பஞ்சுவை ரிஜெக்ட் செய்த இயக்குனர் எம்.ராஜேஷ்..!

176

குணச்சித்திர நடிகராக வலம் வரும் சுப்பு பஞ்சுவுக்கு தனது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் மூலமாக பளீர் வெளிச்சம் போட்டுக்காட்டியவர் இயக்குனர் எம்.ராஜேஷ்.. இன்று சுப்பு பிசியான நடிகர். தற்போது நாரதன் படத்தில் முதன்முதலாக வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் சுப்பு பஞ்சு..

காமெடி கலந்து நடித்து வரும் சுப்பு பஞ்சுவை வில்லனாக்க முடியுமா என சற்றும் யோசிக்காமல் அவரை அந்த கேரக்டரில் ஒகே செய்து அவரை டோட்டலாக மாற்றியுள்ளாராம் இயக்குனர் நாகா வெங்கடேஷ். ஆனால் சுப்பு சினிமாவுக்கு வரும் முன் சின்னத்திரையில் ‘அரசி’ என்கிற சீரியலில் கொடூர வில்லனாக நடித்தவர்தான்.

ஆனால் அவரை தனது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்காக தேர்ந்தெடுத்த இயக்குனர் ராஜேஷ், கடைசிவரை அவருக்கு அந்த கேரக்டரை கொடுக்காமல் அவரை வெயிட்டிங் லிஸ்ட்டிலேயே வைத்திருந்தாராம். காரணம் வில்லனாக நடித்துவந்த அவர் காமெடியனாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் தான். கடைசி இரண்டு நாட்களில் தான் அவரை ஒகே செய்தாராம் ராஜேஷ். ஆனால் சுப்பு பஞ்சுவோ எல்லாவிதமான பாத்திரங்களையும் செய்யவேண்டும் என்பதுதான் தனது ஆசை என்கிறார்.

Comments are closed.