“சித்தார்த் குட்டி கமல்” – சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா

208


ரொமாண்டிக், சாக்லெட் பாயாக பார்த்த சித்தார்த்தை ஆக்‌ஷன் ஹீரோவாக நினைத்துப் பார்க்க முடியுமா..? முடியும் என்கிறது ‘பீட்சா’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா’ படத்தின் ட்ரெய்லர். ‘எ மியூசிக்கல் கேங்ஸ்டர் ஸ்டோரி’ என, ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே டெரர் ஏற்றுகிறது.

சித்தார்த் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கும் இந்தப்படத்தில் பொப்பி சிம்ஹா, கருணாநிதி என சூதுகவ்விய பட்டாளங்களும் உண்டு. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

பாரதிராஜா உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா பேசும்போது போகிறபோக்கில், “இன்றைய பாரதிராஜா என்றால் அது கார்த்திக் சுப்பராஜ் தான்.. அதேமாதிரி சித்தார்த் ஒரு குட்டி கமல்” என ஐஸ் மாலை சூட்டிவிட்டு போனார்.

Leave A Reply

Your email address will not be published.