வரும் மார்ச்-9ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. படத்தைப்போலவே ஒவ்வொரு விஷயங்களிலும் பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக படத்தின் இயக்குனரான ரஜினியின் மகள் சௌந்தர்யா ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்.
அது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழிலும் பிரதிபலிக்க இருக்கிறது. இந்த விழாவிற்கான அழைப்பிதழ் தற்போது சீனாவில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த அழைப்பிதழில் கோச்சடையான் படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் கெட்டப்பை அப்படியே 3டி வடிவமைப்பில் தோன்றும்படி உருவாக்கி இருக்கிறார்களாம்.
இன்னும் இரு தினங்களில் அழைப்பிதழ் கைக்கு வந்துவிடும். அதன்பின் சிறப்பு விருந்தினர்கள் உடபட அனைவருக்கும் அழைப்பு சொல்வதற்கு தயாராகி வருகிறாராம் சௌந்தர்யா. இந்தவிழாவில் பாலிவுட் ‘பிக் பி’ அமிதாப் பச்சன் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.