தமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘ஆதிபகவன்’ என சில தமிழ் படங்களில் நடித்தவர் நீது சந்திரா. தன்னை இயக்குனர்கள் எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்டினாலும் அதுகுறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடியவர் தான் நீது சந்திரா. இருந்தாலும் கோடம்பாக்கத்தில் இன்னமும் அவர் ராசியில்லாத நடிகை லிஸ்டில் தான் இருந்து வருகிறார்.
பெரும்பாலும் தமிழ் மற்றும் இந்திப்படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டும் இவர், 2009ல் வெளியான ‘சத்யமேவ ஜெயதே’ என்ற படத்திற்குப்பின் கடந்த ஐந்து வருடங்களாக தெலுங்கில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. அதற்காக வாய்ப்புகளும் வராமல் இல்லை. வந்தவற்றை வேணாம் என தவிர்த்துவிட்டாராம். ஏன் அவற்றை மறுத்தாராம்.?
‘சத்யமேவ ஜெயதே’ படத்தில் நடித்தபோது அந்தப்படத்தின் ஹீரோ டாக்டர் ராஜசேகருடன் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் தான் நீதுசந்திராவை தெலுங்கு சினிமாவை புறக்கணிக்க வைத்ததாம்.. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் எழுதி, பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அதை அழித்தும் விட்டார்.
இருந்தாலும் தற்போது விக்ரம் கே.குமார் இயக்கியுள்ள, நாகார்ஜூனாவின் குடும்பப்படமான ‘மனம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நீது சந்திரா.