தமிழில் தான் ஆளைப் பார்க்க முடியவில்லையே தவிர, ராமையா வஸ்தாவையா, ரேஸ்குர்ரம் என தெலுங்கில் பிஸியாகவே இருக்கிறார் ஸ்ருதிஹாசன். இன்னொரு பக்கம் இந்தியில் வெல்கம் பேக், கப்பார் என அங்கேயும் கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். தற்போது ராம்சரணுடன் நடித்துள்ள எவடு படத்தின் ரிலீஸைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
வெறுமனே ஒரு நடிகையாக மட்டுமே நின்றுவிடுவதில் ஸ்ருதிஹாசனுக்கு துளியும் விருப்பம் இல்லையாம். எதன்மீது ஆர்வம் தோன்றுகிறதோ அதை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார் ஸ்ருதி. காரணம் கேட்டால், “ஒரு விஷயம் எனக்குபிடித்துவிட்டால் அது எனக்கு உபயோகமாக இருக்கிறதோ இல்லையோ அதை கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். இப்படித்தான் இசைமீது ஆர்வம் வந்த உடனே அதைக் கற்றுக்கொள்வதற்காக உடனே அமெரிக்கா கிளம்பிவிட்டேன். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் எனக்கு அது நிச்சயம் கைகொடுக்கும்” என்கிறார் ஸ்ருதி.