அட்டகத்தி ரஞ்சித், கார்த்தி கூட்டணியில் ‘காளி’

116

அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்ல, திரையுலகத்தின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ரஞ்சித். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவருக்கு இப்போது கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது. படத்தின் பெயர் காளி.

இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க, புதுமுகம் ஒருவரை தேடிவருகிறார் ரஞ்சித். அட்டகத்தி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான், இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது கார்த்தி நடித்துவரும் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபிறகு, இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தை வெளியிட்ட ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.