இந்த முறை கேரளாவில் ஓணம் பண்டிகையில் கலந்துகொள்ள ஐந்து படங்கள் தயாராக இருக்கின்றன. மம்முட்டி நடித்துள்ள தெய்வத்திண்டே ஸ்வந்தம் க்ளீட்டஸ், திலீப்பின் சிருங்கார வேலன், சுரேஷ்கோபி, ஜெயராம் நடித்துள்ள சலாம்காஷ்மீர், பிருத்விராஜ் நடித்துள்ள லண்டன் பிரிட்ஜ், அவரது அண்ணன் இந்திரஜித் நடித்துள்ள ஏழாமத்தே வரவு என முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களும் இருந்தாலும் லாலேட்டனின் படம் மட்டும் இந்த ரேஸில் கலந்துகொள்ளவில்லை என்பது வருத்தமான செய்திதான்.
அதேபோல கடந்த ரம்ஜான் பண்டிகையன்றும் மம்முட்டி, ப்ருத்விராஜ் படங்கள் ரிலீஸானதே தவிர மோகன்லாலின் படம் ரிலீஸாகவில்லை. சொல்லப்போனால் இப்போது தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்திலும் கன்னடத்தில் மைத்ரி என்றபடத்திலும் நடித்துவரும் லாலேட்டன் மலையாளப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.