மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கியவர் டைரக்டர் விக்ரம் கே.குமார். சிம்பு, த்ரிஷா நடித்த ‘அலை’ படத்தை இயக்கியவரும் இவர்தான். இவர் தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல மூத்த நடிகரான நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா மற்றும் பேரன் நாகசைதன்யா என மூன்று நடிகர்களையும் வைத்து மனம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அனேகமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரேபடத்தில் நடிப்பது இதுதான் சினிமாவில் முதன்முறையாக இருக்கும். இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும் அவரது மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள்.