சூர்யாவின் பாதையில் பின்தொடரும் பிருத்விராஜ்

65

சிங்கம் முதல்பாகத்திற்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பும் வெற்றியும்தான் தொடர்ந்து சிங்கம்-2வை எடுக்க ஹரியையும் சூர்யாவையும் தூண்டியது. ஆனால் சிங்கம்-2விற்கு கிடைத்த வரவேற்பும் வசூலும் சிங்கம் முதல்பாகத்தையும் மிஞ்சிவிட்டது.

இதேபோல இப்போது மலையாளத்திலும் ஒரு போலீஸ் கதையை இரண்டாம் பாகமாக எடுக்க இருக்கிறார்கள். இந்தவருடம் பிருத்விராஜ் நடித்து மலையாளத்தில் வெளியான் மும்பை போலீஸ் படம் சூப்பர்ஹிட் ஆனது. இப்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் எடுக்கப்போகிறார்கள்.

இந்த மும்பை போலீஸ் படத்தில் ராஸ்கல் மோசஸ் என்ற ரஃப் அண்ட் டஃப் அதிகாரியாக அசத்தியிருந்தார் பிருத்விராஜ். ரோஸன் ஆண்ட்ரூஸ் இயக்கிய இந்தப்படத்திற்கு பாபி-சஞ்சய் என்ற இரட்டை எழுத்தாளர்கள் கதை எழுதியிருந்தனர். வரிசையாக ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் படங்களுக்கு கதை எழுதிவரும் இவர்கள்தான் கடந்த 2011ல் வெளியான சூப்பர்ஹிட் படமான ட்ராஃபிக் படத்தின் கதையையும் எழுதினார்கள்.

இப்போது மும்பை போலீஸின் கூட்டணி அப்படியே இரண்டாம் பாகத்திலும் தொடர அதே தயாரிப்பாளர்தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். மும்பை போலீஸ் 2ஆம் பாகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுவிதமான அவதாரம் எடுத்திருக்கிறார் பிருத்விராஜ்.

தற்போது ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற படத்தை இயக்கிவரும் ரோஸன் ஆண்ட்ரூஸ், அதை முடித்துவிட்டு இந்த இரண்டாம் பாகத்தை ஆரம்பிப்பார் என்று தெரிகிறது. ஒரு படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகம் வெளியான அதே வருடத்தில் ஆரம்பிக்கப்படுவது இதுதான் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.