பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் இவர்கள் மூவரும் ஒரு படத்தில் இருக்கும்போது அதைவிட படத்துக்கு வெளிச்சம் ஏதாவது வேண்டுமா என்ன? ஆனாலும் இவர்கள் நடித்துவரும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்திற்காக இந்திய மைக்கேல் ஜாக்ஸனான நம்ம பிரபுதேவாவை அழைத்து ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ஃபரா கான்.
ஒரு இயக்குனராக பிரபுதேவாவின் கொடி தற்போது பாலிவுட்டில் உயரத்தில்தான் பறக்கிறது. அவரது பங்களிப்பு ஏதாவது ஒரு விதத்தில் தங்களது படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என சில முன்னணி இயக்குனர்களும் நடிகர்களும் நினைக்கிறர்கள்.
அதிலும் இந்தப்படம் டான்ஸ் போட்டி சம்பந்தமானது என்பதால் பிரபுதேவா ஒரு பாடலுக்கு ஆடினால் நன்றாக இருக்கும் என நினைக்க, பிரபுதேவாவும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஆடிக்கொடுத்திருக்கிறார். ஷாருக்கானும், இயக்குனர் ஃபராகானும் பிரபுதேவாவுக்கு தங்களது நன்றிகளை ட்வீட் செய்திருக்கின்றனர். ஃபராகான் ஏற்கனவே ஷாருக்கை வைத்து ‘ஓம் சாந்தி ஓம்’, ‘மெய்ன் ஹு நா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.