விஜய்க்கு மோகன்லாலின் சர்ப்ரைஸ் கிஃப்ட்

102

‘ஜில்லா’ படம் இளைய தளபதியையும் லாலேட்டனையும் மிகவும் நெருக்கமாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இருவருமே தங்களது வீட்டிற்கு மற்றவரை அழைத்து விருந்தளித்து கௌரவப்படுத்தியுள்ளனர். முதலில் மோகன்லாலை தன் வீட்டு விருந்திற்கு விஜய் அழைக்க, அவரும் விஜய்யின் அழைப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டு விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

அதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது பங்களாவில் விஜய்யையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்து கேரள பாணியில் விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் லாலேட்டன். விருந்து முடிந்து விஜய் கிளம்பும்போது அவரிடம் ஆரடி உயரத்தில் அழகான பெயிண்டிங் ஒன்றை மோகன்லால் பரிசளிக்க, சந்தோஷத்தில் அப்படியே நெகிழ்ந்துவிட்டாராம் விஜய்.

Leave A Reply

Your email address will not be published.