சென்னை பாஷை பேசும் சரண்யா பொன்வண்ணன்..!

100


சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்பது மிக முக்கியமானது.. சொல்லபோனால் படத்தையேகூட தாங்கிப் பிடிக்கக்கூடியது. அந்த வகையில் இப்போது பிஸியான அம்மாவாக வலம் வருபவர் சரண்யா பொன்வண்ணன் தான். கிட்டத்தட்ட அனைத்து இளம் நடிகர்களுக்கும், வளரும் நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் தற்போது ‘என்னமோ நடக்குது’ படத்தில் விஜய் வசந்துக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

இந்தப்படத்தில் அவர் சென்னையில் உள்ள ஒரு குடிசை பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்கிறார் . இதற்காக பிரத்யேகமாக சென்னை தமிழை கற்று கொண்டார், அது மட்டுமலாமல் அந்த பாஷையில் வெளுத்துக்கட்டி இருக்கிறார். இந்தப்படத்தை ராஜபாண்டி என்பவர் இயக்குகிறார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் சேர்ந்த காட்சி. அனைவரும் அவர் சரியாக நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருந்தபோது அங்கிருந்த எல்லோரையும் சரண்யா உட்பட தன்னுடைய நடிப்பால் கவர்ந்தார் விஜய் வசந்த் . ஒரே டேக்கில் நடித்து தானும் ஒரு கை தேர்ந்த நடிகர் தான் என்பதை நிரூபித்து, தேசியவிருது பெற்ற நடிகையடமே பாராட்டு பெற்றார் விஜய் வசந்த்.

Leave A Reply

Your email address will not be published.