சீனுராமசாமி டைரக்சனில் உதயநிதி..!

218

ஒரு நடிகராக உதயநிதி தற்போது இன்னொரு தளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் என்றார் தெரிகிறது. அவர் நடிக்கும் படங்களும் அந்தப்படத்தின் இயக்குனர்களும் நிச்சயம் உதயநிதியின் வேறு ஒருமுகத்தை காட்டுவார்கள் என்றே நம்பலாம். அந்தவகையில் தற்போது இயக்குநர் பிரயதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

இதைத் தொடர்ந்து விஜய்சேதுபதியை வைத்து, சமீபத்தில் தர்மதுரை வெற்றி படத்தை கொடுத்த சீனு ராமசாமியுடன் இணைந்து அடுத்தப் படத்தில் நடிக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் உதயநிதி படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.