சந்தோஷ் சிவனை இங்கே பலருக்கு ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு இயக்குனராக, தயாரிப்ப்பாளராக, ஒரு நடிகராக என பல தளங்களில் இயங்கி வருபவர் என பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சந்தோஷ் சிவன் தற்போது லிங்குசாமியின் டைரக்ஷனில் சூர்யா நடித்துவரும் பெயரிடப்படாத படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
அதேசமயம் ‘சிலோன்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார் சந்தோஷ் சிவன். இந்தப்படம் ஆங்கிலத்தில் ‘சிலோன்’ என்றும் தமிழில் ‘இனம்’ என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இது ஈழ விடுதலைப் போராட்டத்தின்போது ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட நான்கு இளைஞர்களைப் பற்றிய கதைதான் என்றும் விடுதலைப்புலிகளை பற்றியது அல்ல என்றும் கூறுகிறார் சந்தோஷ் சிவன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. கடந்த 2011ல் சந்தோஷ் சிவன் இயக்கிய ‘உருமி’ படம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.