சிம்பு தற்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினை வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார் பாண்டிராஜ். ஆக்ஷன், ரொமாண்டிக் ஏரியாவில் புகுந்து விளையாடுபவர் சிம்பு. பாண்டிராஜோ கிராமத்து ஏரியாவில் பசங்களுடன் கபடி ஆடுபவர். இவர்கள் இரண்டுபேரும் இணைந்திருப்பது உண்மையிலேயே ஒரு புதுவிதமான காம்பினேஷன் தான்.
இந்தப்படத்தில் சிம்புவின் நண்பனாக சந்தானத்துடன் சேர்ந்து சூரியும் நடிக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறாராம். ஆனால் ஹீரோயின் தான் இன்னமும் கிடைத்தபாடில்லை. இதுபற்றி பாண்டிராஜ் சொல்லும்போது, “சிம்புவுக்கு பொருத்தமான தேவதை மாதிரி பெண்ணைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் யாரென்று தான் இதுவரை எங்களுக்கே தெரியவில்லை” என்கிறார்.