கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானம், பவர்ஸ்டாருடன் கூட்டணி சேர்ந்து படத்தின் ஹீரோவாக நடித்த சேதுவை மறந்திருக்க மாட்டீர்கள்தானே?இப்போது மீண்டும் சந்தானத்துடன் இணைந்து ‘வாலிப ராஜா’என்ற படத்தில் நடித்து வருகிறார் சேது. அதே படத்தில் இவருடன் ஜோடி போட்ட விஷாகாவும் இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத்தும் நடிக்கிறார்கள். சாய் கோகுல் ராம்நாத் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தில் சேது வசதியான சிட்டி பையனாக நடிக்கிறார். இதற்காக தனது உடல் எடையைக் குறைத்து ஹேர்ஸ்டைலையும் மாற்றியிருக்கிறார் சேது. “நான் தான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்தவனா என்று படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் குழம்பித்தான் போவார்கள். அந்த அளவுக்கு என்னுடைய தோற்றமே இதில் டோட்டலாக மாறியிருக்கிறது” என்கிறார் சேது
இந்தப்படத்தில் சந்தானம் முக்கியமான கேரக்டரில் டாக்டர் ராஜா என்கிற சைக்யாட்ரிஸ்ட்டாக நடிக்கிறார். கதைப்படி காதலிக்க துவங்கும் சேதுவுக்கு பலவிதமான பிரச்சனைகள் வருகின்றன. இதனால் இதற்கு உதவி தேடி சைக்யாட்ரிஸ்ட்டான சந்தானத்திடம் போகிறார் சேது. கல்யாணமாகாத சந்தானமோ ஏற்கனவே ஹீரோயின்கள் இரண்டு பேருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருபவர். இவர்களுடன் சேர்த்து சேதுவுக்கும் சில ஐடியாக்களை கொடுக்க, அவையெல்லாம் காமெடி கலாட்டாவாக முடிகின்றதாம்.. இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.