ரீமா கல்லிங்கலுக்கு ‘டும் டும் டும்’- காதலரை கைபிடிக்கிறார்!

69

இயக்குனர்-ஹீரோயின் காதல் காம்பினேஷனில் லேட்டஸ்டாக ஜோடிசேர இருக்கிறார்கள் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவும் நடிகை ரீமா கல்லிங்கலும். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது ‘22 ஃபீமெல் கோட்டயம்’ படத்தில் தான். இந்தப்படத்தை ஆஷிக் அபு இயக்க, ஃபஹத் ஃபாசில், ரீமா கல்லிங்கல் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருப்பதாக கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பே ஒரு கிசுகிசு பரவ, நம்ம ஊர் ஹீரோயின்கள் மாதிரி பதறிபோய் அதை மறைக்க முயற்சி எல்லாம் செய்யவில்லை ரீமா. துணிச்சலாக தாங்கள் காதலிப்பதை ஒத்துக்கொண்டவர் விரைவில் தங்களது திருமணம் நடக்கும் என்றும் அறிவித்தார்.

அதை உறுதிசெய்யும் விதமாக இப்போது அவரது காதலரான ஆஷிக் அபுவும் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தங்களது திருமணம் நவம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என கூறியுள்ளார். மேலும் ரீமா தன்னை திருமணம் செய்துகொள்வதால் அவரது நடிப்புலக பயணம் எந்தவிதத்திலும் தடைபடாது என்றும் அவர் எப்போதும்போல படங்களில் நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.