முட்டை தக்காளி வீச்சிலிருந்து மயிரிழையில் தப்பினார் தீபிகா படுகோனே

55

இந்தி சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி. இவர் தற்போது ராம்லீலா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் வளர்ந்து வந்தபோதே பல எதிர்ப்புகளை சந்தித்தது. சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, மீண்டும் ஒரு சிக்கலை எழுப்பியுள்ளது.

இந்தப்படத்தில் மத உணர்வுகளை தூண்டிவிட்டு இருவேறு பிரிவினருக்குள் தேவையில்லாமால் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருப்பதாகவும், அதனால் இந்தப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இன்னொருபுறம் சம்பந்தப்பட்ட இரண்டு பிரிவினர்களும் இந்தப்படத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள அஹமதாபாத்திற்கு வருகை தந்தார் தீபிகா. குஜராத்தி ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் விழாவில் கலந்துகொள்ளப்போகிறோம் என்ற நினைப்புடன் தான் அவர் கிளம்பினார். ஆனால் தீபிகா அஹமதாபாத் வருவதாக கேள்விப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் வந்தால் அவர்மீது வீசுவதற்கு முட்டை, தக்காளியுடன் தயாராக இருந்தனர். ஆனால் அந்த சமயத்தில்தான் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி ஒப்புக்கொண்ட தகவல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

இதனால் தீபிகா மீது முட்டை வீசுவதை கைவிட்டுவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியுடன் கலைந்து சென்றார்களாம். இந்த விவகாரங்கள் எதுவுமே அறியாத தீபிகா இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல வந்து, விழாவில் ஜாலியாக கலந்துகொண்டு கிளம்பிச் சென்றாராம். கிட்டத்தட்ட முட்டை, தக்காளி வீச்சிலிருந்து ஜஸ்ட் லைக் தட் தப்பித்திருக்கிறார் தீபிகா. இவ்வளவு பிரச்சனைகளுக்கு காரணமான இந்தப்படம் வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி, அதாவது இன்னும் ஒரு மாதம் கழித்து தான் ரிலீஸாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.