விஜய் ஆண்டனியின் இசையில் பாடினார் சந்தானம்

78

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார். யாராலும் மறக்க முடியாத இவர் பெயரில், ஒரு படம் தயாராகி வருகிறது. பாகன் திரைப்படத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்து வரும் இந்தப்படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்த கணேஷா இயக்குகிறார். விஜய்ஆண்டனி இசையமைக்கும் இந்தப்படம் அறிவியல் களம் சார்ந்த, ஆனால் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது.

நம்பியார் படத்திற்கு இன்னொரு பலம் சந்தானம். சமீபத்தில் இந்தப்படத்துக்காக விஜய் ஆண்டனியின் இசையில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் சந்தானம். சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா கூறும்போது, “படத்தில் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் வரும் பாடலை யாரை வைத்துப் பாட வைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும் என்றார் விஜய் ஆண்டனி. சந்தானம் மறுத்துவிடுவார் என்றுதான் நினைத்தோம். ஆனால் சந்தோஷமாக பாட ஒப்புக்கொண்ட அவர், ஐந்து மணி நேரம் எடுக்கும் என்று நினைத்த பாடலை பதினைந்து நிமிடங்களில் முடித்துக்கொடுத்துவிட்டார்” என்கிறார்.

படத்தின் தலைப்பு மிகப்பெரிய ஜாம்பவானின் பெயராச்சே, பிரச்சனையை உருவாக்கி விடக்கூடாது என நம்பியார் அவர்களின் மகன் மோகன் நம்பியார் அவர்களை அணுகியபோது, தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள் என அனுமதி கொடுத்தாராம். இதைவிட படத்தின் காஸ்டியூம் டிசைனர் பொறுப்பை ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.