தமிழ்ப்படங்களில் தங்கச்சி வேடங்களிலேயே நடிக்க அழைக்கிறார்கள் என்பதால் வேலாயுதம் படத்திற்கு பிறகு கொஞ்சநாட்களாக படம் எதிலும் நடிக்காமல் இருந்தார் சரண்யா மோகன். நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்தவர், இப்போது, தான் நினைத்தமாதிரியே ‘கோலாகலம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் ஒரே நேரத்தில் தமிழ், மலையளம் என இரு மொழிகளில் தயாராகும் ‘தக்காளி’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் சரண்யா மோகன். பெரும்பாலும் இதுவரை கிராமத்துப்பெண் கதாபாத்திரங்களிலேயே நாம் பார்த்து வந்த சரண்யா மோகன் இந்தப்படத்தில் டாக்டராக நடிக்கிறார். முன்னாள் நடிகை ஜெயபாதுரியின் மகன் க்ரிஷ் சத்தார் கதாநாயகனாக நடிக்கிறார். ராஜேஷ் கன்னங்கரா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ‘டா தடியா’ படத்தின் மூலம் பாப்புலரான சங்கர் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.