விக்ரம் கே.குமார் டைரக்சனில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘24’ என உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஆம் வெறும் நம்பர் மட்டும் தான் டைட்டிலே.. சூர்யாவின் பட டைட்டில்களில் இது வித்தியாசமானதுதான். ஆனால் ஏற்கனவே தான் இயக்கிய படத்திற்கு ’13B’ என நம்பரில் டைட்டில் வைத்தவர்தானே விக்ரம் கே.குமார். அதனால் பெரிதாக ஆச்சர்யப்பட தேவையில்லை. ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து இதிலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.
வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ‘ஆய்த எழுத்து’, ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தையடுத்து மூன்றாவது முறையாக சூர்யா நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டெயிண்மென்ட்’ நிறுவனமே தயாரிக்கிறது. படப்பிடிப்பை ஏப்ரலில் துவங்க இருக்கிறார்கள்.
Comments are closed.