
தமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘ஆதிபகவன்’ என சில படங்களில் மட்டுமே நடித்தார் நீது சந்திரா. ஆதிபகவனில் வில்லித்தனம் காட்டி, பைட்டெல்லாம் பண்ணினாலும் தனது திறமையை தொடர்ந்து யாரும் பயன்படுத்தவில்லையே என்கிற வருத்தம் நீதுவுக்கு உண்டு.. ஆனால் அவர் வருத்தம் தீர்க்கும் ஆபத்பாந்தவனாக கைகொடுத்திருக்கிறார் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ்.
ஆம். தமிழில் தற்போது ஆர்.கே நடிக்கும் ‘என் வழி தனி வழி’ படத்தை இயக்கி முடித்துவிட்ட ஷாஜி கைலாஷ், அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் நீது சந்திரா தான் கதாநாயகி. அதுமட்டுமல்ல, முதன்முறையாக இரட்டை வேடங்களிலும் நடிக்கிறார். மியூசிக் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்-18ஆம் தேதி துவங்க இருக்கிறது.
Comments are closed.