இந்த மூன்று வருடங்களில் தனது கமர்ஷியல் ஆக்ஷன் படங்கள் மூலம் இந்தி சினிமாவை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச்சென்றவர் சல்மான்கான். தபாங், வாண்டேட், ரெடி, பாடிகார்டு, தபாங்-2, ஏக் தா டைகர் என எல்லாமே அக்மார்க் கமர்ஷியல் மசாலாக்கள். அதுமட்டுமல்லாமல் வசூலை வாரி வழங்கி சல்மான்கானை நிரந்தர வசூல் நாயகனாக மாற்றிய படங்கள். இவை அனைத்துமே மறுக்கமுடியாத உண்மைதான்.
ஆனால் தனது இந்த சாதனை பற்றிய எந்த ஒரு மகிழ்ச்சியையும் சல்மான்கான் பெரிதாக வெளிப்படுத்தவில்லை. காரணம் கேட்டால் “ஆக்ஷன் படங்கள் பார்த்து, ரசிக்க நன்றாக இருந்தாலும் கிரியேட்டிவிட்டியை மழுங்கடித்துவிடுகிறது. இதுபோன்ற படங்களின் ஆயுட்காலம் இனிவரும் நாட்களில் குறைந்துவிடும். ஒரு ஆள் அடிக்க, ஐம்பது பேர் பறந்துபோய் விழுவது எல்லாமே கூடிய விரைவில்மாறும்” என ஆருடம் சொல்கிறார் சல்மான்கான்.
தற்போது தான் நடித்துவரும் ஜெய்ஹோ, கிக் ஆகிய படங்களில் இந்த வழக்கமான ஃபார்முலாவில் இருந்து விலக முயற்சி செய்திருக்கிறாராம் சல்மான்கான். இன்னொரு போனஸ் செய்தி, மீண்டும் பிரபுதேவாவின் டைரக்ஷனில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் சல்மான்.