எதிர்நீச்சல் படத்திற்கு பிறகு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ப்ரியா ஆனந்த் பிஸியான நடிகையாகிவிட்டார். அதர்வாவுடன் ‘இரும்புக்குதிரை’, விக்ரம் பிரபுவுடன் ‘அரிமா நம்பி’ என வளர்ந்துவரும் இளம் ஹீரோக்களுக்கு இப்போது ஜோடி இவர் தான். சிவாவுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள ‘வணக்கம் சென்னை’ படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ‘அரிமா நம்பி’ படப்பிடிப்பின்போது ஒரு மேடு பள்ளமான குறுகலான சந்துக்குள் ஓடிவரும் காட்சி எடுக்கப்பட்டபோது தடுமாறி கீழே விழுந்ததில் ப்ரியா ஆனந்திற்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உடனே அடுத்த காட்சிக்கு தயாராகி விட்டாராம் பிரியா.
தற்போது பாண்டிச்சேரியில் அதர்வாவுடன் ‘இரும்புக்குதிரை’ படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும் ப்ரியா ஆனந்த், இந்த ஷெட்யூலை முடித்துவிட்டு அதர்வாவுடன் டூயட் பாட இத்தாலிக்கு பறக்க இருக்கிறார். அங்கே 20 நாட்கள் முகாமிடும் ‘இரும்புக்குதிரை’படக்குழுவினர் சில பாடல்களையும் ஒரு சில காட்சிகளையும் படமாக்க இருக்கிறார்கள். யுவராஜ் போஸ் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.