ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் தான் ‘உயிருக்கு உயிராக’. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ப்ரீத்தி தாஸ் ஒரு அக்மார்க் பஞ்சாபி பெண். என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். ஆனால் ஆறு மொழிகள் பேசி அசத்துகிறார் ப்ரீத்தி.
இது தவிர திரைப்படக்கல்லூரி மாணவரான கமல் இயக்கியுள்ள ‘மறுமுகம்’ படத்தில் டேனியல் பாலாஜிக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார் ப்ரீத்தி தாஸ். மலையாளத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக மோகன்லாலுடன் இவர் நடித்த ‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’ படம் அங்கே இவருக்கு மிகவும் பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது.
தற்போது இரண்டு படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்துவரும் ப்ரீத்தி தாஸ் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று கூறினாலும் அதற்கான லிமிட்டை தாண்ட மாட்டாராம். “நாளை என் குடும்பத்துடன் உட்கார்ந்து நான் நடித்த படங்களை பார்க்கும்போது முகம் சுழிக்கும்படி இருக்க கூடாது” என்கிறார் ப்ரீத்தி தாஸ் தெளிவாக.