ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது வாங்கிய இன்னொரு நபர் சவுண்ட் இஞ்சினியரான ரசூல் பூக்குட்டி. தற்போது மீண்டும் ஒருமுறை ஆஸ்கர் விருதுக்கான வாய்ப்பு ‘தி குட் ரோடு’ படத்தின் மூலமாக அவரது வீட்டுக்கதவை தட்டியிருக்கிறது.
’சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து அனுப்ப, பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட்டன. ‘தி லஞ்ச் பாக்ஸ்’, ‘தி குட் ரோடு’, ‘பாக் மில்கா பாக்’, ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ மற்றும் கமலின் ‘விஸ்வரூபம்’ உட்பட பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட்டன.
‘தி குட் ரோடு’ என்கிற குஜராத்தி மொழி திரைப்படத்தை, இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்தப்படத்தின் சவுண்ட் இஞ்சினியர் ஏற்கனவே ஆஸ்கர் விருதை அள்ளிவந்து நமக்கு பெருமை சேர்த்த ரசூல் பூக்குட்டி தான். ஜியான் கெர்யா என்கிற புதுமுக இயக்குநர் இயக்கிய இந்தப்படம், சிறந்த குஜராத்தி மொழி திரைப்படம் என்கிற தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.