ஒத்த செருப்பு – விமர்சனம்

290

தமிழ் திரையுலகில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் போனவர் இயக்குனர் நடிகர் பார்த்திபன். அதனால்தான் அவர் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் கழித்தும் இன்னும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு பீல்ட் அவுட் ஆகாமல் இருக்கிறார் அவருக்கு பின்னாலும் முன்னாலும் வந்து எத்தனையோ நடிகைகள் இயக்குனர்கள் காணாமல் போய்விட்ட நிலையில் தற்போது ஒத்த செருப்பு என்கிற வித்தியாசமான ஒரு முயற்சியுடன் களமிறங்கியிருக்கிறார் பார்த்திபன். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது

பார்த்திபன் காவல்நிலையத்தில் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் இருக்கிறார். மிகவும் நேர்மையான டி.சி மற்றும் முன்கோபக்காரரான ஏ.சி. ஆகியோர் பார்த்திபனை மிக தீவிரமாக விசாரணை செய்கின்றனர்.

இவ்வளவும் காவல்நிலையத்தின் உள்ளே நடக்க, காவல்நிலையத்திற்கு வெளியே பார்த்திபனின் மகன் இருக்கிறார். இந்த விசாரணையில் பல கொலைகளை பார்த்திபன் செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்த கொலைகளை ஏன் செய்தார்? எப்படி செய்தார்? என்று சொல்வது படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சி என்று சொன்னால் இந்த படத்திற்காக இயக்குனர் நடிகர் பார்த்திபன் எடுத்திருக்கும் ஒரே படத்தில் ஒரே ஒருவர் என்கிற இந்த முயற்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.. மற்ற கதாபாத்திரங்களின் முகம், உடல் எதுவுமே காட்டப்படவில்லை.. ஆனால் அவர்கள் அனைவருமே அந்தப்படத்தில் இருக்கிறார்கள் என்பது போல உணர்த்தும் விதமாக, நம்பும் விதமாக இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.. குரல்களில் மட்டுமே வரும் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு பார்த்திபன் தனி ஒரு ஆளாக இரண்டு மணி நேரம் கழித்து போரடிக்காத வகையில் படத்தை கொண்டு சென்றிருக்கிறார்

படம் முழுக்க பார்த்திபனின் முகம் தான். பார்த்திபனின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இந்தப்படத்தின் பார்த்திபன் புதுமையாக என்னதான் செய்திருக்கிறார்? என்ற ஆவலோடு வரும் ரசிகர்களை படம் நிச்சயம் கவரும்.

ரசூல் பூக்குட்டியின் துல்லியமான ஒலிப்பதிவு சூழ்நிலையை அழகாக உணர்த்துகிறது. இது படத்திற்கு மேலும் ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

இளையராஜாவின் பாடல்களை மிகச் சரியாக பின்னணியில் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் பார்த்திபன். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.

கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என அவதாரம் எடுத்துள்ள பார்த்திபன் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக வெளிவந்துள்ள இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம்.

Comments are closed.