கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ரமணா. லஞ்சத்துக்கு எதிராக ஒரு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது இந்தப்படம். அடுத்ததாக தெலுங்கிலும் சிரஞ்சீவி நடித்து அங்கேயும் சூப்பர்ஹிட்டானது. தற்போது இதை இந்தியிலும் ‘கப்பார்’ என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்கிறார்கள் என்பது சில மாதங்களுக்கு முன்பே தெரிந்த செய்திதான்.. சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்த படத்தில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்க, தமிழில் ‘வானம்’ படத்தை இயக்கிய கிரிஷ் தான், இந்தியில் இந்தப்படத்தை இயக்குகிறார்.
ரமணாவில் சிம்ரன் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில், ‘கப்பார்’ படத்தில் அமலாபால் நடிக்கிறார் என ஒரு பேச்சு நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த கேரக்டரில் கத்ரீனா கைஃப் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த கேரக்டரில் நடிக்க ஒரு தென்னிந்திய முகம்தான் தேவை என்பதால் அமாலாபால் நடிப்பதாக இருந்தது.
ஆனால் தற்போது இந்தி மார்க்கெட் நிலவரத்தை கணக்கில் கொண்டுதான் தற்போது கத்ரீனா கைஃப்ஃபை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். அவரும் இதில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். இதனால் அமலாபாலை தேடிவந்த முதல் இந்தி வாய்ப்பு கைநழுவி போய்விட்டது. தற்போது தமிழ், தெலுங்கில் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு சில படங்களை தவிர, கைவசம் படங்கள் இல்லாத அமலாபாலுக்கு இந்தி வாய்ப்பும் பறிபோனது பரிதாபம் தான்.