ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமான செய்தி. கூடவே ஒரு மகிழ்ச்சியான செய்தியும். ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படம் ரிலீஸ் செய்யப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். ஆனால் படத்தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி தான் ரிலீஸ் செய்கிறார்கள்.
அப்போ தலைவரின் பிறந்தநாளுக்கு விசேஷம் எதுவும் இல்லையா என ஏமாற்றம் அடையவேண்டாம். அன்றைக்குத்தான் ‘கோச்சடையான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த இருக்கிறார்கள்.
கடந்தவருடம் ரஜினி தனது பிறந்தநாள் அன்று வழக்கமான வெளியூர் பயணம் எதுவும் போகாமல் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களது வாழ்த்துக்களைப் பெற்று அவர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். இந்தமுறை இசைவெளியீட்டிலும் கலந்துகொண்டு, ரசிகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கலாம்.