தயாரிப்பாளராக ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என ஸ்டார் வேல்யூ ஆர்டிஸ்ட்ஸ் என பக்கவான டீம் அமைந்திருந்தாலும் ‘ராஜாராணி’ படத்தின் பூஜை தினத்தன்று கமல் நேரில் வந்து வாழ்த்தியதிலேயே பூரித்துப் போயிருந்தார் படத்தின் அறிமுக இயக்குனரான அட்லீ. கமலின் ஆசீர்வாதத்தோடு தொடங்கிய ‘ராஜாரணி’யை வெற்றிப்படமாகவும் மாற்றி தமிழ்சினிமாவில் கவனிக்கத்தக்க, அதிலும் இவ்வளவு இளம் வயதிலேயே சாதித்த இயக்குனர் என பெயரும் எடுத்துவிட்டார் அட்லீ.
‘ராஜாராணி’ படத்தின் வெற்றியை கமலுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று கூறியுள்ளார் அட்லீ. மேலும் தனது வெற்றியை உலக நாயகனுடன் பகிர்ந்துகொள்ள நினைத்த அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸ், நயன்தாராவுடன் சென்று கமலை நேரில் சந்தித்துள்ளார். அப்போது படத்தைப்பற்றிய சின்னசின்ன விஷயங்களைக்கூட குறிப்பிட்டு அட்லீயின் டைரக்ஷனை பாராட்டியுள்ளார் கமல். அவரை சந்தித்துவிட்டு வந்தபின், “ராஜாராணி படம் வெற்றி அடைந்தாலும் இந்த மண்ணின் மைந்தனான கமல் சாரின் மூலமாக பாராட்டப்படுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இது எனது வேலைக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் அட்லீ.