ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் பென்சில்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க, முதலில் நடிகை பிரியா ஆனந்தைத்தான் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் இப்போது அந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா. ஆனால் இதைப்பற்றியெல்லாம் வருத்தப்படாத பிரியா ஆனந்த் ஜீ.வி.பிரகாஷுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப்படத்தில் தான் நடிக்க முடியாமல் போனது குறித்து காரணம் சொல்லும்போது, இந்தப்படத்தின் கதையை கேட்கும் முன்னரே தான் இந்தப்படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டதாகவும், ஆனால் தான் இப்போது நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் இந்தப்படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்க இயலவில்லை என்றும் கூறியிருக்கிறார் பிரியா ஆனந்த்.