ஐந்து நாளில் பத்து லட்சம் பேர் – ராஜாராணி ட்ரெய்லர் சாதனை

100

கடந்த 23ஆம் தேதி வெளியான ராஜாராணி படத்தின் ட்ரெய்லரை இதுவரை பத்து லட்சம்பேர் இணையதளத்தில் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இந்த வரவேற்புக்கு காரணம் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள் என்பதாலா.. இல்லை அழகுப்புயல் நஸ்ரியாவும் இருக்கிறார் என்பதாலா.. இல்லை ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ இந்தப்படத்தை இயக்கியிருப்பதாலா.. இல்லை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப்படத்தை தயாரித்திருப்பதாலா.. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

சமீபத்தில் வெளியான ராஜாராணி படத்தின் ட்ரெய்லர் ஹிட்டானதுக்கு இதில் எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். இந்த வரவேற்பினால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்களாம். இந்த ட்ரெய்லர் இவ்வளவு வரவேற்பைப் பெற இன்னொரு முக்கிய காரணம், இதை செண்டிமெண்ட், காமெடி, எமோஷன் என கச்சிதமாக கோர்த்து எடிட் செய்த எடிட்டர் ஆண்டனி எல்.ரூபன் தான். இவர் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் எடிட்டராக அறிமுகமானவர். ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.