2011ல் வெளியான தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு நடிகை மீனா தமிழில் படம் எதுவும் நடிக்கவில்லை. தமிழ் சினிமாவில்தான் மீனாவை பார்க்க முடியவில்லையே தவிர அவர் மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஒன்று சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்கும் த்ரிஷ்யம்.. மற்றொன்று மெகாஸ்டார் மம்முட்டியுடன் நடித்துவரும் பால்யகால சகி.
ஏற்கனவே மோகன்லாலுடன் வர்ண பகிட்டு, மிஸ்டர் பிரம்மச்சாரி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார் மீனா. தற்போது நடித்துவரும் த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாக, ஒரு டீன்–ஏஜ் பெண்ணுக்கு தாயாக நடிக்கிறார் மீனா. பெற்றோருக்கும் வளர்ந்த மகளுக்கும் அவ்வப்போது நடக்கும் மனப்போராட்டம் தான் படத்தின் கதை.