வெளிநாடுகளில் சாதனை படைக்கும் ‘ராஜாராணி’

48

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ராஜாராணி’, முதல் வார இறுதியில் 12.2 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. இது இதுவரை இந்த வருடம் வெளிவந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் என கூறப்படுகிறது. அட்லீயின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்துள்ள இந்தப்படம், ஆர்யா நடித்து இதுவரை வந்த படங்களில் பெரிய படம் என்ற பெயரை தட்டிச்சென்றுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் இந்த படத்தின் சாதனை பிரமிப்பு ஊட்டுகிறது. இந்தப்படத்தின் வெளிநாட்டு வசூல் 8,00,000 டாலரையும் (நம்ம ஊர் மதிப்பு ரூ 5கோடி) தாண்டுகிறது. மலேசியாவில் ‘ராஜா ராணி’யின் வசூல் சாதனை பிரம்மாண்டமாய் இருப்பதாக விவரங்கள் தெரிவிக்கின்றன.

‘ராஜா ராணி’ படமாக்கப்பட்ட நேர்த்திக்காகவும், குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் வகையில் படமாக்கபட்ட விதத்துக்க்காகவும் ஊடங்கங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பேராதரவு பெற்றுள்ளது. இந்தப்படத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்ல பல்வேறு யுத்திகளை கையாண்ட விதத்துக்காக இந்தப்படத்தின் விளம்பர குழுவுக்கும் ஏகோபித்த பாராட்டு கிடைத்துள்ளது.

தயாரிப்பாளர் முருகதாஸ் கூறும்போது ‘பாக்ஸ் ஸ்டார்’ நிறுவனத்தாருடன் என்னுடைய கூட்டு வெற்றி தரும் கூட்டாகவே அமைந்து உள்ளது. கூட்டாக தயாரிக்க வேண்டும் என முடிவு செய்யும் போதே தரமான படங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்மானமாக இருந்தோம். அட்லீயின் கதையில் நாங்கள் எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் இருந்தது” என்று கூறியுள்ளார்.

பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சிங் கூறும் போது ‘முருகதாசுடன் இணைந்து தயாரிக்கும் எங்கள் படங்களுக்கு இவ்வளவு ஆதரவு கிடைப்பது எங்களுக்கு பேரானந்தமே. எங்களது பெருமையான அறிமுகம் அட்லீயின் அருமையான கதை அமைப்பு, மற்றும் தேர்ந்த தொழில்நுட்ப யுக்தியை பார்க்கும்போது, அவருக்கு இது முதல் படம்தானா என்று வியக்க வைக்கிறது. அவருடன் அடுத்த படத்துக்கும் இணைய ஆர்வமாக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.