விஜய், தான் நடித்துவரும் ஜில்லா படத்திற்காக தற்போது ஐதராபாத்தில் முகாம் இட்டிருக்கிறார். இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஐதராபாத்தில் தான் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அதிக எண்ணிக்கையிலான கேமராக்களை பயன்படுத்தி இந்த சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார் இயக்குனர் நேசன். பொதுவாக ஷங்கரின் படங்களில் தான் இத்தனை கேமராக்களை, ஒரே நேரத்தில், ஒரே காட்சியை பலவிதமான கோணங்களில் எடுக்க பயன்படுத்துவார்கள்.
அதேமுறையை இப்போது ஜில்லா படத்திலும் கையாளுகிறார் நேசன். மேலும் இந்த சண்டைக்காட்சிக்காக மிக பிரமாண்டமான மரத்தாலான செட் ஒன்றையும் அமைத்து அதில் விஜய்யும் வில்லன்களும் மோதும் காட்சியை படமாக்குகிறார்கள். ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்ததும் அடுத்து பாடல் காட்சிக்காக பல்கேரியா நாட்டுக்கு பறக்கிறது ஜில்லா படக்குழு.