ராகவேந்திரர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுகிறார் லாரன்ஸ்..!

182


நடிகர் ராகவா லாரன்ஸ், மகான் ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தர் என்பது உலகறிந்த செய்தி தான். அந்தவகையில் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் அவர் கட்டியிருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது. ராகவேந்திரர் பிறந்த நாளான பிப்ரவரி-25ஆம் தேதியை தனது கோயிலில் மிக பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

காலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான நிகழ்சிகள் நடக்க உள்ளது. மேலும் ராகவேந்திரர் திருவீதி உலாவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. சென்ற வருடம் மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டது போல, இந்த வருடம் சுமார் ஐயாயிரம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று மதியம் சுமார் 2000 பேருக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

மற்றபடி, அவர் தற்போது இயக்கி நடித்துள்ள ‘முனி–3 ; கங்கா’ படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருகிறது. இந்தப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். ஏப்ரல்-9ஆம் தேதி படம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.