
கமல் தனது குரு ஸ்தானத்தில் வைத்து போற்ரும் இயக்குனர்களில் ஒருவர் தான் ஆர்.சி.சக்தி. உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று இன்று காலமானார். கமல் நடித்த ‘உணர்ச்சிகள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன இவர் ரஜினி,கமல் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.
கமழும் ஐவரும் ஒரே ஊர்க்காரர்கள். கமல் சினிமா பற்றிய தனது பெட்டிகளில் எல்லாம் ஆர்.சி.சக்தி பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் குறிப்பிட தவறியதே இல்லை. கமலும் விஜயகாந்தும் இணைந்து நடித்த ஒரே படமான ‘மனக்கணக்கு’ படத்தை இயக்கியதும் இவர் தான்.
ரஜினியை வைத்து தர்மயுத்தம்’ படத்தை இயக்கினார். லட்சுமியை வைத்து இவர் இயக்கிய சிறை அனைவராலும் பாராட்டப்பட்ட படம். கடந்த சில வருடங்களாக இவர், சிறுநீரக வியாதியினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக, அவருக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
Comments are closed.