ஹேப்பி பர்த்டே ராண்டி..!

196


தமிழ் சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்தான் ரத்னவேலு. திரையுலகைச் சேர்ந்தவர்கள் இவரை ‘ராண்டி’ என செல்லமாக அழைப்பார்கள். 1997ல் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமான ‘அரவிந்தன்’ படத்தில் தான் இவரும் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

பாலாவின் முதல் படமான ‘சேது’ அடுத்து ‘நந்தா’, என ஆரம்பகாலத்தில் அவரது கண்களாக இருந்து செயல்பட்டவர். கௌதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’, சூப்பர்ஸ்டாரின் ‘எந்திரன்’ ‘லிங்கா’, மகேஷ்பாபுவின் ‘1-நேனோக்கடினே’ என இவரது ஹிட் ரெக்கார்டுகளுக்கும் குறைவில்லை..

மெகா பட்ஜெட் படங்களில் பணிபுரிந்தாலும் அதேசமயம் ‘ஹரிதாஸ்’ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களிலும் தனது திறமையால் பளிச்சிட்டவர் ரத்னவேலு. இன்று பிறந்தநாள் காணும் ‘ராண்டி’க்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.