புலிகளை கூண்டில் அடைக்க பிரியாமணி எதிர்ப்பு..!

101

கவுண்டமணி ஒரு படத்தில் சில்வர்ஸ்பூன் சில்பாகுமார் என்ற சூப்பர் ஹீரோவாக (படத்துக்குள் தான்) நடித்திருப்பார். அதில் அவரை வேட்டை வீரனாக சித்தரித்து, காட்டிற்கு சென்று புலியை வேட்டையாடுவது பற்றி கதை சொல்ல வருவார் ஒரு இயக்குனர்.

அப்போது அவரிடம் “புலி என்ன மவுண்ட் ரோடு தர்கா முன்னாடி உக்காந்துக்கிட்டா போற வாரவங்களை எல்லாம் கடிக்குது.? அது இருக்குற காட்டுக்குள்ள போனா கடிக்கத்தான் செய்யும்” என காமெடியாக சொல்லுவார். அதையே தற்போது சீரியஸாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார் நடிகை பிரியாமணி.

PETA என்கிற விலங்குகளை பாதுக்காக்கும் அமைப்பின் மூலம் புலிகளை, மற்றும் மிருகங்கள் அனைத்தையும் கூண்டில் அடைத்து காட்சிப்பொருளாக மாற்றியுள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு எதிராக தனது நூதனமான பிரச்சாரத்தை துவங்கியுள்ளார் பிரியாமணி. இதற்காக புலியைப்போல உடையணிந்து “புலிகளை கூண்டில் அதிகக் கூடாது” என போர்டில் எழுதப்பட்ட வாசகத்துடன் சமீபத்தில் போஸ் கொடுத்திருக்கிறார்.

“நம்மை வாழ்நாள் முழுவதும் ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்து இதிலேயே இருக்கவேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? கற்பனை பண்ணவே பயங்கரமாக இருக்கிறதல்லவா.? மிருகங்களும் அதுமாதிரிதானே.. அவைகள் காட்டிலே திரிவது போன்று சுதந்திரமான சூழ்நிலையை உயிரியல் பூங்காக்களில் ஏற்படுத்தி தரவேண்டும்” என்கிறார் பிரியாமணி ஆவேசமாக.

Comments are closed.