நாவலுக்கே டீசர் வெளியிட்டு அசத்தும் கபிலன் வைரமுத்து..!

73

இந்த செய்தியை படித்துவிட்டு புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அல்லது தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என உங்களுக்கு பிடித்த பழமொழி ஒன்றை நீங்களே மனதில் நினைத்த்க்கொண்டு சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்.

விஷயம் இதுதான். கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்து தனது பத்தாவது புத்தகத்தை, அதாவது மூன்றாவது நாவலை எழுதியுள்ளார். நாவலின் பெயர் ‘மெய்நிகரி’. இது ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழும் ரியாலிட்டி ஷோ பற்றிய கதை. முழு நாவலும் ஒரு படத்தொகுப்பாளரின் பார்வையால் சொல்லப்பட்டிருப்பதால் நூதன முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது

இந்த நாவல் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் விதமாக www.meinigari.com என்ற அறிமுகத்தளம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதைக்களமும், கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. நாவல் வெளியிடுவதற்கு முன் டீசர் போஸ்டர், வெப்சைட் என்று சமூக வலைத்தளங்களில் ‘மெய்நிகரி’ பரவிக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் இறுதியில் கிழக்கு பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது.

Comments are closed.