‘போடாபோடி’ இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

60

இயக்கி இருப்பது ஒரே ஒரு படம்தான். அதுவும் தாமதாகத்தான் வெளியானது. ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த மாதிரி முதல் படத்திலேயே நல்லபெயரை வாங்கித்தந்தது. மேலே சொன்னதெல்லாம் சிம்பு நடித்த ‘போடாபோடி’ படத்தை இயக்கிய டைரக்டர் விக்னேஷ் சிவனைப் பற்றித்தான்.

‘போடா போடி’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை இயக்க கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்திவந்தார். இப்போது ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து, தனது புதிய படத்தை ஆரம்பித்துவிட்டார். படத்தின் பெயர் ‘நானும் ரௌடிதான்’. ஹீரோ நம்ம விஜய்சேதுபதி தான். இந்தப்படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ்..!

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் நண்பராகவும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அதுமட்டுமல்ல ‘வணக்கம் சென்னை’ படத்தில் இடம்பெற்று சூப்பர்ஹிட் பாடலான ‘எங்கடி பொறந்த’ பாடலை எழுதியதும் இவர்தான். இன்று தனது 30வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் விக்னேஷ் சிவனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

Comments are closed.