செப்-19.. அதாவது நாளை மகேஷ்பாபு நடித்துள்ள ‘ஆகடு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. மகேஷ்பாபு ஜோடியாக தமன்னா நடித்துள்ள இந்தப்படத்தை சீனு வைத்லா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன.
இந்தப்படத்தில் ‘என்கௌண்டர் சங்கர்’ என்கிற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மகேஷ்பாபு. போலீஸ் என்றாலே அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியை விட, லத்தியை விட அவர்கள் அணிந்திருக்கும் பெல்ட் அனைவரையும் பயமுறுத்தும் தானே..?
அதனால் பெல்ட்டை மையப்படுத்தி படத்தை விளம்பரம் செய்யும் விதமாக 12000 அடி நீளமுள்ள, அதாவது சுமார் 4 கி.மீ நீளமுள்ள பெல்ட் ஒன்றை விசாகபட்டிணம் ஆர்.கே.பீச்சில் வைத்து ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் மகேஷ்பாபு.
உலகின் அதி நீளமான பெல்ட் இதுதானாம். இது தவிர குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ‘ஆகடு’ படம் பொறித்த டீசர்ட்டுகள், பெல்ட், கீ-செயின்கள், தலையில் கட்டும் பேண்டுகள் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.
Comments are closed.