மூன்றாவது திருமணம் செய்தார் பவன் கல்யாண்

103

டோலிவுட் பவர்ஸ்டார் பவன் கல்யாணுடன் ‘டீன்மார்‘ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார் ஆஸ்திரேலியா முன்னாள் மாடல் அழகியான அன்னா லெஹ்நேவா. பவன் கல்யாண் இவரை காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது திருமணமும் செய்துவிட்டார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்ததும் அதை பதிவுத்திருமணமாக நடத்த எண்ணிய பவன் கல்யாண் ஆகஸ்ட் மாதத்தில் துணை பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்து, செப்டம்பரில் திருமணமும் செய்துள்ளார். இதற்கான சான்றிதழ் எப்படியோ, யாரோலோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதை அந்த பதிவு அலுவலக அதிகாரியும் ஆதாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இது பவன் கல்யாணின் 3வது திருமணம் ஆகும். சமீபத்தில் பவன் தனது 2வது மனைவி ரேணு தேசாயை விவாகரத்து செய்தார். ஏற்கனவே தனது முதல் மனைவி நந்தினியை 2008ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பவனின் இந்த செயல் அவரது ரசிகர்களிடம் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தப்போகிறது எனபது போகப்போகத்தான் தெரியும்.

Leave A Reply

Your email address will not be published.