தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரணுடன் ஜோடி சேருவதில் ஹாட்ரிக் சாதனை செய்யவிருக்கிறார் காஜல் அகர்வால். ராஜமௌலி டைரக்ஷனில் வெளியான ‘மகதீரா’ படத்தில் இருவரும் இணைந்து நடித்ததும் படம் சூப்பர் டூப்பர்ஹிட் ஆகி இருவரும் ராசியான ஜோடி என பெயர் எடுத்ததும் பழைய, ஆனால் சுவையான வரலாறு.
இந்த ராசிதான் மீண்டும் இருவரையும் ‘நாயக்’ என்ற படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கவைத்தது. இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக இந்த ஜோடி ஒரு படத்தில் இணைகிறது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்குகிறார்.
முதலில் ராம்சரணுக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்றுதான் நினைத்தார்களாம். ஆனால் சரியான ஜோடி கிடைக்காததால் காஜலையே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். வரும் ஜனவரி-18ஆம் தேதி முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.