ஹ்ருத்திக் ரோஷனின் (முன்னாள்) மனைவி ஆவேசம்

113

இதுவும் ஒரு விவாகரத்து சம்பந்தமான செய்திதான். பாலிவுட் திரையுலகின் முக்கிய நட்சத்திரமான ஹ்ருத்திக் ரோஷனின் தன் மனைவி சூசனை விவாகரத்து செய்த விஷயம் தான் இப்போது மும்பையின் ஹாட் டாபிக் என்பது உங்களுக்கு தெரியும். ஹ்ருத்திக் ரோஷன் தனது மனைவியுடனான திருமண வாழ்க்கை முடிவதாக கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அறிவித்தார்.

தற்போது சூசன், ஹ்ருத்திக் ரோஷனிட ஜீவனாம்சமாக 100 கோடி ரூபாய் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கோபமான சூசன், ”நான் ஹ்ருத்திக்கிடம் இருந்து ஜீவனாம்சமாக 100 கோடி ரூபாய் வாங்கியிருப்பதாக பொய்யான தகவல்களை பத்திரிக்கைகள் வெளியிட்டு வருவது நெறிமுறையற்ற செயல்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவரின் தனிப்பட்ட செயல்களைப் பற்றி தவறான செய்திகள் வெளியிடுவது கூடாது என்றும், தாங்கள் இருவரும் இன்னும் ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். 4 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹ்ருத்திக் மற்றும் சூசன் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.