டைட்டில்தான் இப்படி ஏடாகூடமாக இருக்கிறதே தவிர , பொண்ணுகளை அழவச்சுப் பாக்குற எந்த ஆம்பிளையும் நல்லா இருக்கமுடியாது என்கிற கருத்தை வலியுறுத்தும் படம்தான் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’. அதனால் டைட்டிலைப் பார்த்து இது ஏதோ பெண்களுக்கு எதிரான படம் என நினைத்துவிடவேண்டாம்.
குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்’ படத்தில் கதாநாயகனாக மாறிய இந்த சேரனின் உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன், தற்போது இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறி தனது லட்சியத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்.
இந்தப்படத்தில் சிவராமகிருஷ்ணனுக்கு ஜோடியாக ‘மனம்கொத்தி பறவை’ ஆத்மியா, மற்றும் பெங்களூரை சேர்ந்த காருண்யா ராம் இருவரும் நடித்துள்ளனர். மிக முக்கியமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார்.
தற்போதைய தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்திக்கொண்டு பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பல இடையூறுகள் தந்து அவர்களை சமூக அவலங்களுக்கு ஆளாக்குவதோடு, அவர்களின் வாழ்கையையும் சீரழிக்கிறார்கள் ஒரு சில கயவர்கள்.
அப்படி ஒரு தவறான நட்பினாலும், காதலாலும் ஏற்படும் பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தவும், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும்,அவர்களின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ திரைப்படம் என்கிறார் சிவராமகிருஷ்ணன். இந்தப்படம் வரும் ஏப்ரல்-25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
Comments are closed.