சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் 14ஆம் தேதி திங்கள் மாலை தேவி திரைஅரங்கில் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை பார்க்கும்போது பல சுவாரஸ்யமான விஷயங்கள் தென்படுகின்றன.
1.படத்தில் சந்தானத்திற்கு விஜய் போல ஓப்பனிங் சாங் இருக்கிறது.
2.சந்தானத்தை கலாய்த்து டீஸ் பண்ணும் காமெடி வில்லனாக டைரக்டர் ராஜகுமாரன் (நம்ம தேவயானி கணவர் தானுங்க) வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் பட்டைய கிளப்புகிறார்.
3.ஹீரோயின் அஸ்னா, சந்தானத்திற்கு வைத்திருக்கும் பட்டப்பெயர் ‘டைம்பாஸ்’.
4.சந்தானத்திற்கு க்ளைமாக்ஸில் மிகப்பெரிய ஆக்ஷன் பிளாக் ஒன்று இருக்கிறது.
5.‘படிச்சவனுக்கு ஐடி கம்பெனி.. படிக்காதவனுக்கு நைட்டி கம்பெனி’ என்கிற சந்தானம் பிராண்டு நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.
6. தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக் இது என்பதால் வெற்றிக்கான உத்தரவாதத்தை இப்போதே பெற்றுவிட்டமாதிரித்தான்..
Comments are closed.