போக்கிரி ராஜா – விமர்சனம்

347

pokkiri raja review

தனது முதல் படத்தில் செல்போன் சிக்னலை வைத்து அறிவியல் பூர்வமாக கதை பண்ணிய ராம்பிரகாஷ் ராயப்பா, இந்த முறை கொட்டாவி’ விடுவதில் உள்ள அறிவியலை வைத்து காமெடி ஏரியாவில் குதித்துள்ளார்..

கதாநாயகன் ஜீவாவுக்கு கொட்டாவி விடுவது தான் பிரச்சனை.. அவ்வப்போது அவரது வேலைக்கும் உலைவைக்கிறது..இது ஒருபக்கம் இருக்க, காதலி ஹன்ஷிகாவுடன் சேர்ந்து சமூக சேவையில் ஈடுபடும்போது ரவுடி சிபிராஜை எதிர்பாராத விதமாக அவமானப்படுத்தி விடுகிறார் ஜீவா..

சிறைக்குச்சென்று திரும்பும் சிபிராஜ் கோபத்தில் ஜீவாவை கொல்ல வரும்போதும் அந்த கொட்டாவி ஜீவாவை காப்பாற்றுவதுடன், சிபியின் பார்வையையும் பஞ்சராக்குகிறது. ஜீவாவின் கொட்டாவி பிரச்சனைக்கு முடிவு வந்ததா..? சிபிக்கு பார்வை கிடைத்ததா..? இருவரின் மோதல் எதில் போய் முடிந்தது என்பதற்கு க்ளைமாக்ஸ் விடைசொல்கிறது..

இயக்குனர் புதிய முயற்சியில் ஒரு விஷயத்தை கையில் எடுத்திருந்தாலும் ஆமை வேகத்தில் நகரும் கதை ஜீவாவுக்கு மட்டுமல்ல நமக்கும் அடிக்கடி கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவி விடுவதுடன் ஜீவாவின் வேலையும் காதல், கலாட்ட என ஹன்ஷிகாவின் வேலையும் அளவோடு நின்றுவிட, முழுப்படத்தையும் ஓரளவு தாங்கிப்பிடிக்கிறது சிபிராஜின் நக்கல் கலந்த வில்லத்தனமும் யோகிபாபுவின் காமெடியும்.. அதிலும் பார்வை தெரியாமல் சிபிராஜ் தடுமாறுவதும் அவரது கேங் அடிக்கும் கூத்தும் செம கலாட்டா.

இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம் ரகம்.. ஏற்கனவே ஓரளவு ஹிட் ஆனதுதானே..? கொட்டாவி என்பதில் உள்ள ஓர் ஆச்சர்யமான விஷயத்தை கண்டுபிடித்த இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, அதை வைத்து காமெடி களம் என்பதால் அதைவைத்து இன்னும் இறங்கி ஆடியிருக்க வாய்ப்பு இருந்தும் அந்த ரூட்டில் பயணிக்காமல் பாதை மாறியிருக்கிறார். மேற்கொண்டு கதையை எப்படி நகர்த்துவது என நிறையவே தடுமாறி இருக்கிறார். ஒரு வலுவான திரைக்கதைக்கு இது போதாதே.. பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம் சார்..

ஆமா. கொட்டாவி விடுபவனுக்கு எதற்கு போக்கிரிராஜா என்கிற டைட்டில்..?

Comments are closed.