நடிகர்கள் : அதர்வா முரளி, கயடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நட்டி, டிராவிட், ஏஞ்சலினா, சுதாகர், ரக்ஷன், தமன்.எஸ்
இசை : தமன்.எஸ்
ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா
இயக்கம் : ஆபாஷ் பாஸ்கரன்
தயாரிப்பு : டாவ்ன் பிக்சர்ஸ்
தன் திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் நாயகன் அதர்வா முரளி, தோற்றுப்போன தன் காதல் கதைகளை சக பயணியான பகத் பாசிலிடம் சொல்கிறார். ப்ரீத்தி முகுந்தன் உடனான அவரது முதல் காதல் தோல்வி செம ட்விஸ்ட்டில் முடிகிறது. அதனால் ஆர்வத்தோடு இரண்டாவது காதல் கதை கேட்கிறார். கயடு லோஹர் உடனான அவரது இரண்டாவது காதலும் சொல்லாமலேயே தோல்வியில் முடிவடைகிறது.
இப்படி காதலை மனதுக்குள் வைத்து சொல்லாமலேயே தோல்வியை சந்திக்கும் அதர்வா முரளிக்கு, அவரது மாம திருமண ஏற்பாடு செய்கிறார். காதல் கைகூடவிலை என்றாலும், திருமணம் செய்து கொண்டு காதலிக்கலாம் என்ற எண்ணத்தில் சென்னை வருபவருக்கு அங்கேயும் ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அது என்ன ?. அவரது கல்யாணம் பிளஸ் திருமணமானவது வெற்றி பெற்றதா ? என்பதை கலகலப்பாக சொல்வதே படத்தின் மீதிக்கதை.
பள்ளி பருவம், இளமை பருவம் என்று அனைத்து பருவத்திலும் செம ஸ்டைலிஷாக இருக்கும் அதர்வா முரளியின் உடை, பாணி அனைத்துமே புதிதாக இருக்கிறது. நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தியிருப்பவர் காதல் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் அழகு தேவதைகளாக வலம் வருகிறார்கள். அவர்களது ஒவ்வொரு அசைவும், சிரிப்பும் ரசிகர்களின் இதயத்தை வெடிக்க செய்கிறது.
அதர்வாவின் மாமா வேடத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், தமன்.எஸ், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா ஆகியோர் காமெடி நடிகர்களாகவும், குணச்சித்திர நடிகர்களாகவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்தின் மிகப்பெரிய பலம். திரைக்கதை நிகழ்த்தாத மேஜிக்கை மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் உருவான காட்சிகள் நிகழ்த்தியிருக்கிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளை மட்டும் இன்றி, படத்தில் இடம் பெறும் சிறு சிறு நடிகர்களை கூட திரையில் மிளிர செய்திருப்பவர், படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓவியம் போல் ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி திரைக்கதை ஓட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது. பின்னணி இசையும் சிறப்பு. பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு காட்சிகளில் இருக்கும் பிரமாண்டத்தை சிதைக்காமல் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறது.
ரமணகிரிவாசனின் வசனம் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன், டிராவிட் செல்வம் ஆகியோரது கூடுதல் வசனங்கள் காதல் காட்சிகளை ரசிக்க வைப்பது போல், காமெடி காட்சிகளில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
காதலை சொல்லாமல் போனதால் தோல்வியடைந்த ஹீரோவின் அனைத்து காதல்களையும் ரசிக்கும்படி திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், அதை பிரமாண்டமான காட்சிகள் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை, எந்தவித தொய்வும் இன்றி, ஜாலியாகவும், காதல் உணர்வோடும் பயணிக்கும் இந்த ‘இதயம் முரளி’ காதலில் தோல்வியடைந்தாலும், ரசிகர்களுக்கு இனிமையான காதல் அனுபவத்தை கொடுக்கிறார்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.