பீட்சா ரீமேக்கில் பார்வதி ஓமனக்குட்டன்

109

கடந்த வருடம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா’வின் வெற்றி இந்திப்பட உலகையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இதன் கன்னட, தெலுங்கு ரீமேக் உரிமை மட்டும் ஒரு கோடிக்கு மேல் சம்பாதித்து தந்தது. இதன் இந்தி ‌ரீமேக் மற்றும் டப்பிங் உரி்மையை அப்போதே ரூ.1.10கோடிக்கு பிஜாய் நம்பியார் வாங்கியிருந்தார். இவர்தான் விக்ரம், ஜீவாவை வைத்து ‘டேவிட்’ படத்தை இயக்கியவர்.

தற்போது படம் தொடர்பான வேலைகளை ஆரம்பித்துவிட்டார் பிஜாய் நம்பியார். இந்தப்படத்தில் அக்‌ஷய் ஓபராய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ரன்னரான பார்வதி ஓமனக்குட்டன். இவர் வேறு யாருமல்ல.. பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர்தான்.

Leave A Reply

Your email address will not be published.